இத்தாச்சி கோபுரம்
இத்தாச்சி கோபுரம் சிங்கப்பூரின் மைய வணிகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வானளாவி ஆகும். இது ராஃபிள்ஸ் இடப் பகுதியில் உள்ள 16 கோலியர் கப்பல்துறை என்னும் இடத்தில் உள்ளது. இதிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில், செவ்ரான் மாளிகை, சேஞ்ச் அலீ, டங் மையம், த ஆர்க்கேட் ஆகிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. கிளிபர்ட் இறங்குதுறையைப் பார்த்தபடி இருக்கும் இக் கட்டிடத்தில் இருந்து, மரீனா குடாவின் விரிவுக் காட்சியைக் காண முடியும். இக் கட்டிடத்தில் இருந்து ராஃபிள்ஸ் இடம் பொதுமக்கள் போக்குவரத்துத் தொகுதி நிலையத்துக்கு நிலக்கீழ் இணைப்பு வழி ஒன்றும் உள்ளது.
Read article